செவ்வாய், 7 ஏப்ரல், 2026

பஞ்சாங்கத்தின் அவசியம்

 

தலைப்பு: பஞ்சாங்கம் ஏன் அவசியம்? - வாழ்வை நெறிப்படுத்தும் காலக் கணிதம்

​ஜோதிட சாஸ்திரத்தில் 'பஞ்சாங்கம்' என்பது வெறும் நாட்காட்டி மட்டுமல்ல; அது நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் வெற்றிகரமாக மாற்ற உதவும் ஒரு வழிகாட்டி. திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து உறுப்புகளே பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகின்றன.

​1. திதி (வெற்றி தரும் காலம்)

​செல்வத்தைப் பெருக்க விரும்புபவர்கள் வளர்பிறை திதிகளையும், மன அமைதி மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தேய்பிறை திதிகளையும் தேர்வு செய்யலாம்.

​2. வாரம் (ஆரோக்கியம்)

​ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு அதிபதி உண்டு. ஞாயிறு ஆரோக்கியத்தையும், திங்கள் மன வலிமையையும் தரும்.

​3. நட்சத்திரம் (பாதுகாப்பு)

​நாம் ஒரு செயலைத் தொடங்கும் போது அந்த நாளின் நட்சத்திரம் நமக்குப் பொருத்தமாக இருந்தால், அந்தச் செயல் தடையின்றி நடக்கும்.

​4. யோகம் & கரணம் (வியாபாரம் மற்றும் காரிய சித்தி)

​இவை ஒரு காரியத்தின் லாப நஷ்டங்களையும், அதைச் செய்யும் வேகத்தையும் தீர்மானிக்கின்றன.

முடிவுரை:

அறிவியல் பூர்வமான கணக்கீடுகளின் அடிப்படையில் அமையும் பஞ்சாங்கத்தை நாம் முறையாகப் பின்பற்றினால், நேரத்தை நமக்குப் சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் துல்லியமான கணக்கீடுகள் பற்றி விரிவாகக் காண்போம்.

ஞாயிறு, 10 மார்ச், 2024

 ஒரு மனிதனுக்கு துணிவைக் கொடுக்கக்கூடிய கிரகம் செவ்வாய் . ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக இருக்கும் ஆசாமிகள், அபாயச்சூழல் நிறைந்த வேலைகள், சவாலான வேலைகள், ரிஸ்க்கான வேலைகள் என்று எதையும் பிரித்துப் பார்க்காமல் துணிந்து செய்யக் கூடியவர்கள். அவர்களுக்கு மனபயம் இருக்காது. துக்கம், கஷ்டங்கள், மரணபயம் போன்றவைகளை அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் சிலர் ஊழல் செவதற்கோ, அவமானத்திற்கோ, அல்லது தண்டனைக்கோ பயப்படாமல் இருப்பார்கள். அதே செவ்வாய் வேறு ஒரு கிரகக் கூட்டணி யால் அல்லது பார்வையால் அவர்களுக்கு அந்த வித்தியாசமான துணிவைக் கொடுக்கும். செவ்வாய்தான் கிரகங்களில் ராணுவ அதிகாரியைப் போன்றவர். வீரர்களின் நாயகன் அவர்தான். யுத்தத்தின் நாயகனும் அவர்தான். குணங்களில், துணிவு, பொறுமை, தன்னம்பிக்கை, தலைமை தாங்கிச் செல்லும் தன்மை ஆகியவற்றை ஒரு ஜாதகனுக்குக் கொடுப்பவர் அவர்தான். சட்டென்ற கோபம் (short-tempered) அதிரடி, அடிதடி, வாக்குவாதம், விதண்டாவாதம் ஆகிய குணங்களுக்கும் அதிபதி அவர்தான். ராணுவத் தளபதிகள், ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றுபவர்களுக்கு செவ்வாய்தான் நாயகன்! தொழில்நுட்ப அறிவிற்கும், இயந்திரங்கங்களை வடிவமைத்தல் மற்றும் இயந்திரங்களை லாவகமாகக் கையாளும் அறிவிற்கும், திறனுக்கும் ஆற்றலிற்கும் அவரே அதிபதி. நாட்டில் சட்டம், ஒழுங்கு, எரிபொருள் போன்றவற்றிற்குக்கான காரகன் அவர்தான். மனஉறுதி, தன்முனைப்பு, ஆற்றல், நிவாகத்திறன், சுதந்திர மனப்பான்மை ஆகிய அற்புத மனித குணங்களுக்கும் அவர்தான் அதிபதி.